• Oct 26 2024

மோடியின் 10 ஆண்டு ஆட்சி.. ராஷ்மிகா மந்தனா இப்படி சொல்லிட்டாங்களே..!

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

கன்னட சினிமாவில் அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. அதில் அவருக்கு கிடைத்த வரவேற்புக்கு பின்னர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து பிரபலமானார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அனிமல் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. ஆனாலும் விமர்சன ரீதியில் படுமோசமாக இவர் விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்ட வளர்ச்சியை பற்றி ராஷ்மிகா மந்தனா புகழ்ந்து பேசி உள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் வைரல் ஆகி வருகின்றன.

அதாவது மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் அரபிக் கடலில் 22 கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டப்பட்ட பிரம்மாண்ட பாலத்தை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. ஆனாலும் இந்த கடல் வழிபாலத்திற்கு 'அடல் சேது' எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இவ்வாறான நிலையில், 'அடல் சேது' பாலம் பற்றி ராஷ்மிகா மந்தனா மேலும் கூறுகையில், ரெண்டு மணி நேர பயணம் தற்போது இருபது நிமிடங்களாக குறைந்துள்ளது. இதனை உங்களால் நம்ப முடிகிறதா? இப்படி ஒரு மாற்றம் வரும் என்று நினைத்து பார்த்திருப்பீர்களா?

நவி மும்பையில் இருந்து மும்பை, கோவாவில் இருந்து மும்பை, பெங்களூரில் இருந்து மும்பை என எல்லா வழிகளிலும் அற்புதமான கட்டமைப்புகளை கொண்டுள்ளது இதை நாம் பெருமைப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் உள்கட்டமைப்பு, சாலை திட்டமிடல் எல்லாமே அற்புதமாக ,உள்ளது. 20 கிலோமீட்டர் பாலத்தை 7,8 வருடங்களில் கட்டி முடித்துள்ளார்கள் இதைப் பற்றி விவரிக்க வார்த்தை இல்லை என்று அவர் கூறியுள்ளார்.


Advertisement