பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான 'கும்கி' திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்த அந்தப் படம், தமிழ் சினிமாவில் யானை மற்றும் காட்டு வாழ்க்கையை மையமாகக் கொண்டு சொல்லப்பட்ட புதிய முயற்சியாக இருந்தது.
இந்நிலையில், இயக்குநர் பிரபு சாலமன் மற்றும் ஒளிப்பதிவாளர் சுகுமார் மீண்டும் ஒன்றிணைந்து 'கும்கி 2' திரைப்படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுவதுமாக காடுகளில் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் மதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளராக நிவாஸ் கே. பிரசன்னா பணியாற்றியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதை பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் தனது எக்ஸ் தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில் காட்டின் மத்தியில் இருண்டும், ஆழ்ந்தும் சென்று ஒரு தனித்துவமான அனுபவத்தை தரும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
'கும்கி 2' படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஃபர்ஸ்ட் லுக் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
Listen News!