தமிழ் சினிமா உலகில் புதுமையும், நேர்த்தியும் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டு, புதுமுக இயக்குநர் சர்ங் தியாகு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "ஆரோமலே". இத்திரைப்படத்தில் கிஷன் தாஸ், மேகா ஆகாஷ், மற்றும் ஷிவாத்மிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோ (intro video) இன்று வெளியானது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே இது சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. காதலும், கவிதைகளும் கலந்து கதையாக மாறும் ஒரு அழகான முயற்சியாக இந்தப் படம் அமைந்துள்ளது.
படத்தின் அறிமுக வீடியோவில், அழகான காட்சிகள், பின்னணி இசை, கதாபாத்திரங்களின் மனநிலைகளை வெளிக்கொணரும் விதம் என அனைத்தும் கலந்திருக்கின்றன. இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியவுடன், சினிமா ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து பேசியுள்ளனர்.
Listen News!