பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா, ‘ராகினி எம்.எம்.எஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். மும்பையில் சர்ச்கேட்டில் நடைபெற இருந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நோக்கில், அவர் அண்மையில் புறநகர் ரயிலில் பயணிக்க முடிவு செய்தார்.
அவருடன் தோழிகளும் இருந்தனர். ரயில் நிலையத்தில் ரயில் வந்து நின்றதும், கரிஷ்மா முதலில் ரயிலில் ஏறினார். ஆனால் ரயில் சில நொடிகளில் பயணத்தை தொடங்கியதால், அவரது தோழிகள் ஏற முடியவில்லை. தோழிகள் ரயிலில் ஏறவில்லை என்பதை ரயில் கிளம்பிய பிறகு தான் கவனித்த கரிஷ்மா, பதற்றத்தில் ரயிலில் இருந்து குதித்தார்.
இந்த சம்பவத்தில் அவர் ரயிலின் பின்புறம் கீழே விழுந்ததால், தலையில் கடுமையான அடிபட்டது. உடனே அவருடைய தோழிகள் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து கரிஷ்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தலை மற்றும் முதுகுப் பகுதியில் வீக்கம் மற்றும் வலி ஏற்பட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களாக கடுமையான வலி தொடருவதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் சி.டி. ஸ்கேன் எடுத்துள்ளனர்.
ரியாலிட்டி ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று வரும் கரிஷ்மாவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடமிருந்து ஆதரவுகள் குவிந்து வருகின்றன.
Listen News!