• Sep 12 2025

இன்று இத்தனை படங்கள் ரிலீஸா? வெளியான லிஸ்ட் இதோ...

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே படங்கள் வெளியாவது வழக்கமாகியுள்ளன.  அது பெரிய படங்களாக இருந்தாலும் சரி, சிறிய படங்களாக இருந்தாலும் சரி.  ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தவறாமல் வெளியாகின்றன. அந்த வகையில் இன்று தியேட்டர்களில்  என்னென்ன படங்கள் வெளியாகின்றன என்பதை விரிவாக பார்ப்போம். 

அதன்படி ஜி.வி பிரகாஷ் நடிப்பில் 'பிளாக்மெயில்' படம் இன்று வெளியாக உள்ளது. மேலும் அதர்வாவின் 'தனல்', அர்ஜுன் தாசில் 'பாம்'  மற்றும்  'குமாரசம்பவம்', 'காயல்' , 'யோலோ', 'மதுரை 16', 'உருட்டு உருட்டு' என்ற படங்களும், தெலுங்கு டப்பிங் படமான 'மிராய்' என்ற படமும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளன. 

பிளாக்மெயில் - இயக்குநர் மு.மரன் இயக்கிய அதிரடி தமிழ்ப்படமாகும். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் தேஜு அஷ்வினி மற்றும் ஸ்ரீகாந்த் கிருஷ்ணமாச்சாரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.


பாம் - இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பாம் ' திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , ஷிவாத்மிகா ராஜசேகர் , காளி வெங்கட் , நாசர் , அபிராமி , சிங்கம் புலி,  பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


குமாரசம்பவம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளித்திரையில் கதாநாயகனாக  ‘குமாரசம்பவம்’ படம் மூலம் அறிமுகமாகிறார். படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 


காயல்- நடிகர் லிங்கேஷ் - நடிகை அனு மோல் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் காயல் எனும் திரைப்படத்தில் லிங்கேஷ், அனு மோல், ஐசக், ஸ்வாதகா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  நெய்தல் மனிதர்களின் வாழ்வியலை யதார்த்தமாக விவரித்து இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜேசு. சுந்தரமாறன் தயாரித்திருக்கிறார்.


யோலோ- அறிமுக இயக்குநர் எஸ். சாம் இயக்கத்தில் உருவாகி உள்ள 'யோலோ' எனும் திரைப்படத்தில் தேவ், தேவிகா, படவா கோபி, ஆகாஷ் பிரேம்குமார், பிரவீண், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்ரு, சுவாதி நாயர், பூஜா ஃபியா, சுபா கண்ணன், கலைக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


Advertisement

Advertisement