• Dec 27 2024

45 வருட திரை வாழ்க்கை.. இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராஜ் கிரணுக்கு என்ன வயது தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வினியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறியவர் ராஜ்கிரண். மிகவும் வறுமையான குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர். இவரின் நிஜப்பெயர் மொய்தீன் அப்துல் காதர். 

தமிழ் திரையுலகில் இவரை காதர் பாய் என அழைப்பார்கள். ஒருகட்டத்தில் தயாரிப்பாளராக மாறி ராமராஜனை வைத்து ஒரு சில படங்களை தயாரித்துள்ளார். இவர் தயாரித்த என் ராசாவின் மனசிலே படத்தில் ராமராஜன் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் ராஜ்கிரணே ஹீரோவாக நடித்தார். 

அந்த படம் ஹிட் அடிக்கவே தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்தார். ஒருகட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். தற்போது வரை அதில் கலக்கி வருகிறார்.


இவ்வாறு 80ஸ் ,90ஸ் களின் ஒரு பேவரைட் நடிகராக வலம் வந்த இவர், ரஜனி முருகன் ,மஞ்சள் பை, பவர்பாண்டி ,முனி போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.


மேலும், ராஜ்கிரண்தனது வாழ்க்கையில் ஒரு பிலிம்பேர் விருது மற்றும் நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

இவர் நடிகர் மற்றுமின்றி இயல்பிலும் நல்ல குணமுடையவர். பல்வேறு வறிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்.  வடிவேலு, விவேக் போன்ற பல நடிகர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே.

இந்த நிலையில், இன்றைய தினம் நடிகர் ராஜ்கிரண் தனது 75வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement