• Jan 16 2025

4500 பேருக்கு ராஜபோக விருந்து.. விஜய்க்கு ஸ்பெஷல் சாப்பாடா? கசிந்த தகவல்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் தலைமையில் நேற்றைய தினம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கல்வி விருது விழா நடைபெற்றது.

இதில் 21 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு இடம்பெற்ற விருது விழாவில் முறையான நேர முகாமைத்துவமின்மை, கட்டுப்பாடு விதிகள் இன்றி சற்று குழப்பத்துடன் விழா நடத்தப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு இடம் பெற்ற கல்வி விருது விழாவில் மாணவர்கள் செல்போன்கள் , பென் பேப்பர் என என்பவற்றை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. 

இதன் காரணத்தினால் விருது வாங்க சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விஜயின் கைகளால் விருதை வாங்கி, அவருக்கு  கைகுலுக்கி தமது நன்றியை தெரிவித்து இருந்தார்கள். இதன்போது லியோ போஸ்ட் , மாஸ்டர் போஸ்ட் என விதவிதமான போஸ்ட்களையும் கேட்டு போட்டோக்களையும் எடுத்துக் கொண்டார்கள்.


இந்த நிலையில், தற்போது சென்னையில் நேற்றைய தினம் இடம் பெற்ற கல்வி விருது விழாவில் சுமார் 16 மெனுக்களை அசால்டாக சமைத்து பரிமாறிய சமையல்காரர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில், கடந்த ஆண்டு இடம்பெற்ற கல்வி விருது விழாவின் போதும் தாங்கள்தான் சமைத்ததாகவும் அதற்குப் பிறகு தற்போது தொடர்ச்சியாக நாங்கள் தான் சமைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.


மேலும் சுமார் 3000 பேருக்கு சமைக்க சொன்னார்கள். ஆனால் 4500 பேர் வரை சாப்பிட்டார்கள். மேலும் கடந்த ஆண்டு 5000 பேருக்கு சமைக்க சொல்லி இறுதியில் 7000 பேர் வரை  வயிறார சாப்பிட்டு சென்றார்கள்.

மேலும் விஜய்க்கு எதுவும் ஸ்பெஷலா சமைச்சிங்களா? என கேட்க இல்லை எல்லா மனுஷங்களும் ஒன்றுதானே. அவரும் எதுவும் ஸ்பெஷலாக சமைக்க சொல்லவில்லை. எல்லாருக்கும் கொடுத்த சாப்பாட்டை தான் அவரும் சாப்பிட்டார் என கூறியுள்ளார்..

அதிலும் இம்முறை பதினாறு வகையான சாப்பாட்டுக்களுடன் கொடுக்கப்பட்ட வெற்றிலை பாயாசம் தான் ஹைலைட்டாக காணப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement

Advertisement