• Sep 15 2025

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இத்தனை லட்சம் சம்பளமா?

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஆண்டுதோறும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள், சினிமா நடிகர்கள், கலைஞர்கள் வெளி உலக தொடர்பின்றி சுமார் 105 நாட்கள்  உள்ளே இருக்க வேண்டும். 

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் எலிமினேஷனில்  மக்கள் விரும்பும் போட்டியாளர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் நீடிப்பர்.  இதில் குறைந்த வாக்குகளை பெற்றவர்கள் ஒவ்வொரு வாரமும் வெளியேறிக் கொண்டிருப்பார்கள். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 8 சீசன்களும் வெற்றிகரமாக முடிந்துள்ளன. இதன் ஒன்பதாவது சீசன் எதிர்வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆரம்பமாகும் என அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகின. எனினும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. 


பிக்பாஸ் ஒன்பதாவது சீசனில்  சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா, நடன கலைஞரான ஜன்மோனி டோலி,  பாக்கியலட்சுமி பிரபலம் நேகா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்,  சின்னத்திரை நடிகர் புவியரசு  உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனை தொகுத்து வழங்குவதற்கு விஜய் சேதுபதி 75 லட்சம் சம்பளம் பெறுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த முறையும் பிக்பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால்  புதிய சீசனில் அவரை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement