• Sep 14 2025

வசூலில் ஜெட் வேகத்தில் செல்லும் மதராஸி..! இதுவரையான மொத்த வசூல் விபரம் என்ன தெரியுமா.?

subiththira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பாதையில் ஓடி வரும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள "மதராஸி" திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்துள்ளார். செப்டம்பர் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 


இந்தப் படம் வெறும் ஒரு கமர்ஷியல் படம் மட்டுமல்ல. சமூகப் பிரச்சனைகளும், அரசியல் சூழ்ச்சிகளும் பின்னணியாக அமைந்துள்ள தீவிரமான ஸ்கிரிப்ட். இதனாலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இருவரிடமிருந்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

"மதராஸி" திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் கதாபாத்திரம் முற்றிலும் வித்தியாசமானது. அவர் அதில் சாதாரண ஹீரோவாக அல்லாமல், மிகுந்த சீரியஸான தோற்றத்தில் காணப்படுகின்றார்.  .


இந்தப் படத்தில் ஹீரோயினியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். அவரது நடிப்பு மற்றும் ஸ்கிரீன் பிரசென்ஸ் இரண்டும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் தற்பொழுது இப்படம் 88 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement