சின்னத்திரை உலகில் தனது அழகாலும், நடிப்புத் திறனாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சீரியல்கள் மூலம் கவனத்தை பெற்றதோடு, பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, தர்ஷா தனது ஸ்டைல் மற்றும் அழகால் இணையத்தில் பேசப்படுபவராக மாறினார். பத்திரிகைகள், இணையதள செய்திகள், மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் மற்றும் விதவிதமான அவுட்ஃபிட்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
தற்போது, தர்ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நீலநிற சாறி அணிந்த புகைப்படங்கள் இணையத்தை கவர்ந்துள்ளன. சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ரசனைக்குரிய கமெண்ட்ஸ் அந்த புகைப்படங்களுக்கு குவிந்து வருகின்றன.
அந்த புகைப்படங்களில், தர்ஷா தனது இயற்கையான அழகையும், உன்னதமான உடைத் தேர்வையும் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!