தமிழ் சினிமாவில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை குஷ்பு. மும்பையைச் சேர்ந்த இவர் 1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.பின்பு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ் பெற்றார்.
ஒருகட்டத்தில் இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட குஷ்புவிற்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். தற்போது குஷ்பு திரைப்படங்களுடன் மட்டுமல்லாமல் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், குஷ்பு - சுந்தர்.சி தம்பதி தங்களது மூத்த மகள் அவந்திகாவின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான மற்றும் உணர்ச்சி நிறைந்த தருணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.
விஜய்யை சந்தித்த பிறகு, குஷ்பு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு உணர்ச்சி பதிவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,

“எங்கள் குடும்பத்திற்கு மிகவும் சிறப்பானதும் மறக்க முடியாததுமான ஒரு நாள் இன்று. எங்கள் அன்பு சகோதரரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜய் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகளின் திருமண அழைப்பிதழை நேரில் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது.”
மேலும் அவர், விஜய்யை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் மேலும் , விஜய் தனது பணிச்சுமையையும் மீறி அன்பாகவும் பாசத்துடனும் அவர்களை வரவேற்றதாக குஷ்பு குறிப்பிட்டுள்ளார். குழந்தைகள் அவரை பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குடும்ப நிகழ்வுடன் கூடிய இந்த சந்திப்பு அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.
Listen News!