தமிழ் சினிமாவில் பழைய ஹிட் படங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பித்து மீண்டும் வெளியிடும் டிரெண்ட் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வரிசையில், அஜித் குமார் மற்றும் ஷாலினி இணைந்து நடித்த 'அமர்க்களம்' திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை இயக்கிய சரண், ஏற்கனவே ரீ-ரிலீஸ் குறித்த தகவலை பகிர்ந்திருந்தார். ஆனால் வெளியீட்டு தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், அஜித்-ஷாலினி தம்பதியின் திருமணநாளை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி முதல் ‘அமர்க்களம்’ திரையரங்குகளில் திரையிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1999ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அஜித்தின் திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது. குறிப்பாக, இது அவரது 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் அஜித் மற்றும் ஷாலினி காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பதால், ரசிகர்களுக்கு இந்த படத்துடன் ஒரு உணர்ச்சி பிணைப்பு உள்ளது.
‘அமர்க்களம்’ படம் மீண்டும் வெளியாகும் செய்தி, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பழைய நினைவுகளை மீண்டும் அனுபவிக்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Listen News!