தமிழ் சினிமாவில் உணர்ச்சிபூர்வமான கதைகளுக்கும், யதார்த்தமான காட்சிப்படுத்தலுக்கும் பெயர் பெற்ற இயக்குநர்களில் ஒருவர் அமீர். இவரை இயக்குநராக அறிமுகப்படுத்தியதோடு, நடிகர் சூர்யாவின் கரியரில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் தான் "மெளனம் பேசியதே".
2002ஆம் ஆண்டு வெளியான “மெளனம் பேசியதே” திரைப்படம் அப்போது இளம் நடிகராக இருந்த சூர்யாவிற்கு ஒரு பெரிய அடையாளத்தை உருவாக்கியது. காதல், உணர்ச்சி, நட்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில், இயக்குநராக அமீரின் திறமையை திரையுலகுக்கு அறிமுகமானது.

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, அமீர் – சூர்யா கூட்டணி குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இருவரும் நெருங்கிய நட்பில் இருந்ததாகவும், பரஸ்பர மரியாதை கொண்ட உறவு நிலவியதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறி வந்தன.
ஆனால் காலப்போக்கில், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவருக்கும் இடையில் பிளவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன்பிறகு, இருவரும் சந்திக்காமல் இருந்தனர்.
எனினும், சமீபத்தில் “மெளனம் பேசியதே” திரைப்படம் மறுவெளியீடாக திரையரங்குகளில் வெளியானது. பழைய கிளாசிக் படங்களை மீண்டும் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த படத்தின் ரீ-ரிலீஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த ரீ-ரிலீஸைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து அமீர் மற்றும் சூர்யா நேரில் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பான போட்டோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Listen News!