• Dec 26 2024

பகுத்தறிவு கொள்கையாளர் சத்யராஜ் எப்படி மோடி பயோபிக் திரைப்படத்தில்? எல்லாம் காசு செய்யும் வேலையா?

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாகவே கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் ஆந்திர முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வெளியானது என்பதையும் பார்த்தோம். மேலும் நான் நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு வரைபடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அடுத்த கட்டமாக பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பாலிவுட்டில் உள்ள ஒரு தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ள நிலையில் பிரதமர் மோடி கேரக்டரில் நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

நடிகர் சத்யராஜ் திராவிட கொள்கைகளில் தீவிரமாக உள்ளவர் என்பதும் பகுத்தறிவு சிந்தனை உள்ளவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டம் உள்ள குறிப்பாக ராமர் கோவில் கட்டி சாதனை செய்த பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவர் எப்படி நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற கேள்வி எழுகிறது.  

அதுமட்டுமின்றி பாரதிய ஜனதாவை மறைமுகமாகவும் நேரடியாகவும் பல இடங்களில் தாக்கி திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்துள்ள சத்யராஜுக்கு எப்படி பிரதமர் மோடி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது என்று பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிக்க சத்யராஜ் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொகை வழங்கப்படுவதால் அதுவே அவர் இந்த படத்தில்  நடிக்க காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் சத்யராஜ் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement