• Dec 26 2024

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் விஜயகாந்த்- வெளியாகிய அறிக்கை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா வரலாற்றில் இருந்து அழிக்கமுடியாத மாபெரும் நடிகர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அரசியலில் களமிறங்கிய பின் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின், உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார். 


இந்நிலையில், 71 வயதாகும் நடிகர் விஜயகாந்த் திடீரென உடல்நல குறைவு காரணாமாக சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனாலும் கூட விஜயகாந்தின் உடல்நிலை குறைத்து பலவிதமான தகவல்கள் உலா வருகிறது.


 இதுகுறித்து தேமுதிக விளக்கம் கொடுத்துள்ளது. இதில் 'தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தான் சென்றுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement