• Dec 26 2024

பெண்கள் என்றாலே மட்டமாப் போச்சா, மேலிடத்திற்கு அறிவிச்சாச்சு- மன்சூர் அலிகானுக்கு எதிராக பொங்கியெழுந்த குஷ்பூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ, இந்த திரைப்படத்தில் நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நடிகை த்ரிஷா குறித்தும் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என மிகவும் ஆபாசமாக பேசியிருந்தார். வில்லன் ரோல் கொடுக்க மாட்டேங்குறாங்க, நடிகையுடன் கற்பழிப்பு காட்சி இல்லையென கூறியிருந்தார். 


இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், த்ரிஷா வெளியிட்டு எக்ஸ் தள பதிவில்,  மன்சூர் அலி கான் என்னைப் பற்றி அவருவருக்கதக்க வகையில் பேசிய ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது.  அவரது பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.. அவரது பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், பெண் வெறுப்பை பரப்பும் வகையில் உள்ளது என்றார்.  

இதனால் த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகை மன்சூர் அலிகான், லோகேஷ் கனகராஜ் ஆகியோரும் தமது கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர். இதனால் நடிகை த்ரிஷா பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்காமல் தப்பாக எடிட் செய்து போட்டு விட்டார்கள் என மன்சூர் அலி கான் விளக்கம் அளித்திருந்தார்.ஆனால், அவர் நடிகைகளை பலாத்கார காட்சியில் தான் எப்படி டீல் செய்து நடித்தேன் என குஷ்பு, ரோஜா உள்ளிட்ட நடிகைகளுடன் நடித்தது குறித்தும், நடிகை த்ரிஷாவுடன் தனக்கு அப்படியொரு சீன் இல்லை என்பது குறித்தும் பேசிய காட்சிகள் இருக்கும் நிலையில், அவருக்கு எதிராக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 


இதற்கு நடிகை குஷ்பூவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் பெண்கள் என்றாலே மட்டமாக நினைத்து பேசும் எண்ணம் எப்படி மன்சூர் அலி கானுக்கு தோன்றியது. த்ரிஷாவிடம் மட்டும் இல்லை என்னிடமும் என்னுடன் நடித்த சக நடிகைகளிடமும் அவர் நிச்சயம் இதற்காக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என ட்வீட் போட்டு விளாசி உள்ளார். 

மேலும், தேசிய மகளிர் ஆணையத்தில் அங்கத்தினராக இருக்கும் நான், இதுதொடர்பாக மேலிடத்திற்கு செய்தியை அனுப்பி விட்டேன். நிச்சயம் மன்சூர் அலி கான் மீது நடவடிக்கை பாயும் என்றும் நடிகைகளை தவறாக எண்ணும் எண்ணம் இனியும் எவருக்கும் வரக் கூடாது என திட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement