• Dec 26 2024

நடிகை ஹன்சிகா இத்தனை குழந்தைகளுக்கு தாயா? அவரே கூறிய எமோஷனல் பேட்டி

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா. தற்போது திரில்லர் படங்களை தேர்ந்து எடுத்து   நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சுந்தர். சி தயாரிப்பில் வெளியான அரண்மனை ஒன்று மற்றும்  இரண்டில் நடித்த ஹன்சிகா, அதை தொடர்ந்து மகா, ரவுடி பேபி போன்ற படங்களிலும் நடித்தார்.

தற்போது அவர் நடித்துள்ள கார்டியன் படம் எதிர்வரும் மார்ச் எட்டாம் தேதி மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.


சிம்பு நடித்த வாலு படத்தை இயக்கிய விஜய் சுந்தர் தயாரிப்பில் தான் இந்த படம் உருவாகியுள்ளதாம். இதற்கான பிரமோஷன் அண்மையில் நடந்த நிலையில், அதில் பேட்டி அளித்துள்ளார் ஹன்சிகா. அதன்படி அவர் கூறுகையில்,


என்னுடைய சிறுவயதில் எனது அம்மா என் பிறந்தநாளுக்கு குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்வார். அங்கே குழந்தைகளை பார்க்கும்போது மிகவும் வருந்துவேன்.

நான் நடிகையாக மாறி பணங்களை சம்பாதித்த பிறகு ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்க ஆரம்பித்தேன். அதன் படி ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு குழந்தைகளை தத்தெடுத்தேன்.இதுவரை 31 குழந்தைகளை தத்தெடுத்து உள்ளேன்.

என்னுடைய திருமணத்திற்கு பிறகு பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்தும் நடித்துக் கொண்டே தான் இருக்கிறேன். அதேபோல் குழந்தைகளையும் கவனிக்கின்றேன். கார்டியன் படம் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

Advertisement

Advertisement