• Dec 26 2024

பிரபல நடிகைக்கு சற்றுமுன் நடந்த திருமணம்.. வைரல் புகைப்படங்கள்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

பிரபல தமிழ் மற்றும் மலையாள திரை உலக நடிகைக்கு சற்றுமுன் திருமணம் நடந்த நிலையில் அந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகியுள்ளது. இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ’வால்மீகி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மீரா நந்தன். இதன் பிறகு அவர்  ’அய்யனார்’ ’காதலுக்கு மரணம் இல்லை’ ’சூரிய நகரம்’ ’சண்டமாருதம்’ ’நேர்முகம்’ உள்ளிட்ட தமிழ் படங்களிலும் பல மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

33 வயதான மீரா நந்தன் விரைவில் திருமணம் செய்யப் போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதும் கடந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடந்ததாகவும் புகைப்படங்கள் வெளியாகின.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் திருமணம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் குறித்த புகைப்படத்தையும் மீரா நந்தன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய திருமண வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மீரா நந்தனை திருமணம் செய்தவர் பெயர் ஸ்ரீஜூ என்று கூறப்பட்டாலும் அவரது விவரங்கள் வெளியே வரவில்லை.. மேலும் இது பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறப்படுகிறது.


Advertisement

Advertisement