தென்னிந்திய சினிமாவின் வலிமைமிக்க நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பன்மொழி திரையுலகிலும் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்துள்ளார். தற்போது, துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் பான் இந்திய பிரமாண்ட படமான DQ 41-இல் ரம்யா கிருஷ்ணன் முக்கியமான பாத்திரத்தில் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பு, இன்று செப்டெம்பர் 15ஆம் தேதி, ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கும், சினிமா வட்டாரத்திற்கும் இரட்டை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
DQ 41 என்ற பெயருடன் தற்போது தயாராகிவரும் இந்தப் படம், முன்னணி நடிகர் துல்கர் சல்மானின் 41வது படமாகும். இந்தப் படம் துல்கர் சல்மான், ரவி நெலகுடிடி மற்றும் சுதாகர் செருகுரி ஆகியோரது கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வருகிறது.
இது ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருவதால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட முக்கிய மொழிகளில் வெளியாக உள்ளது. அத்துடன் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!