தமிழில் வெளியான பட்டாளம், மெய்யழகி, நகர்வலம், காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர்தான் யுதன் பாலாஜி.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் தன்னுடைய தனி திறமையால் பலரது கவனத்தை ஈர்த்தவர்.
இதை தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்கிய காதல் சொல்ல வந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.
அதன்பின்பு பாபி சிம்ஹா, பார்வதி நாயனார் நடித்த வெள்ளை ராஜா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில், நடிகர் யுதன் பாலாஜிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அவர் தன்னுடைய காதலியான சுஜிதா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கு பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதே வேளை, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரீத்தி என்பவரை பாலாஜி திருமணம் செய்து இரண்டு வருடங்களுக்குள்ளேயே அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!