"அமரன் " பட வெற்றியைத் தொடர்ந்து சாய்பல்லவி நாக சைதன்யாவுடன் தெலுங்கில் "தண்டேல் " திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் வசூல் ரீதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அத்தகைய நடிகை தற்போது ஹிந்தியில் "ராமாயணம்" என்ற திரைப்படத்தில் சீதா கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார் .
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசும்போது சாய்பல்லவி,"ரசிகர்களின் அன்புதான் முக்கியம், விருது இல்லை " எனக் கூறியிருந்தார். மேலும் தான் நடிக்கும் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் எமோஷனல் உணர்வுகளுடன் ரசிகர்களை என்னுடன் இணைத்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலேயே நடிப்பதாகவும் கூறியிருந்தார். அதைத் தான் என்னுடைய முதல் வெற்றியாகப் பார்க்கிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.
சாய்பல்லவி ரசிகர்களின் உணர்வுகளை இணைத்துப் பார்க்கும் அளவிற்கு நடிப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தே ஒவ்வொரு படத்தையும் தெரிவு செய்வதாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்துக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுவருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது
Listen News!