பத்ரி ,பார்வை ஒன்றே போதும் ,சமுத்திரம் போன்ற படங்களில் நடித்த நடிகையும் முன்னணி நடிகை சிம்ரனின் சகோதரியுமான மோனல் 2002 ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்து இன்றுடன் 23 வருடங்கள் ஆகும் நிலையில் அவர் குறித்து பதிவு ஒன்றினை நடிகை சிம்ரன் வெளியிட்டுள்ளார்.
தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் என மூன்று மொழிகளில் நடித்து அசத்திய இவர் காதல் தோல்வியின் காரணமாக உயிரிழந்ததாகவும் ஒரு சிலர் இது திட்டமிட்ட கொலை எனவும் கூறி வந்தனர். மேலும் இன்று சிம்ரனின் பதிவு ரசிகர்கள் உட்பட அவரது குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த பதிவில் அவர் “இந்த 23 வருடங்களில் ஒருநாள் கூட உன்னை நினைக்காமல் இருந்ததில்லை மோனல்; நீ மறைந்திருக்கலாம், ஆனால் மறக்கப்படவில்லை” என மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன். மீண்டும் ஒரு முறை மறைந்த நடிகையை நினைவு கூறுமாறு அமைந்துள்ளது.
Listen News!