• Apr 23 2026

பெண்கள் ஏன் சாக்குப்போக்கு சொல்லணும்? - மாதவிடாய் குறித்து மனம் திறந்த நடிகை ஸ்ரீலீலா...

shali / 1 week ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள் மற்றும் மாதவிடாய் குறித்து பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


“மாதவிடாய் பெண்களான நமக்குப் பிரச்சனையாக இருக்கக் கூடாது.” எனத் தொடங்கிய அவர், தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். மாதவிடாய் காலத்திலும் பல பாடல்களுக்கு நடனமாடியதாகவும், அந்தப் பாடல்கள் வெற்றி பெற்றதாகவும் கூறினார். இதன் மூலம் பெண்கள் உடல்நிலை காரணமாக தங்களின் திறமைகளை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை வலியுறுத்தினார்.

மேலும், ஆண்களுக்கு இணையான சம உரிமை பற்றி நாம் பேசும் நிலையில், மாதவிடாயை ஒரு தடையாக அல்லது பிரச்னையாக கருதுவது சரியா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார். 

பெண்கள் இந்த விஷயத்தில் தங்களின் சிந்தனையை இன்னும் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும், மனதில் இருக்கும் தடைகளை சாக்குபோக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ லீலா கூறிய இந்த கருத்துகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

Advertisement

Advertisement