• Dec 25 2024

உண்மை கதையை தழுவிய வேட்டையன்! இணையத்தில் வைரலாகும் ரியல் சரண்யா புகைப்படம்...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தலைவர் ரஜனிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10-ம் தேதி உலக அளவில் ரிலீஸ் ஆனது. இந்த படம் தற்போது வரையில் 350 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.


இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சரண்யா  கதாபாத்திரம் கொலை செய்யப்பட்டு இறந்துவிடவே அவருக்கு நீதி வழங்க வேண்டும் என்ற ரீதியில் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்ட குணாவை தேடி கண்டுபிடித்து என்கவுண்டர் செய்கிறார். 


பின்னர் இவர் குற்றவாளி இல்லை வேறுஒருவர் தான் இதற்கு காரணம் என தெரிந்ததும் அவரை பிடிக்க கடுமையாக முயற்சி செய்து போலீசில் பிடித்து கொடுப்பது தான் இந்த கதை. இதில் சரண்யா மற்றும் குணா   கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டபட்டு வந்தனர். 


இந்நிலையில் வேட்டையன் திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை வைத்தே ஞானவேல் இயக்கியுள்ளார். தற்போது அந்த உண்மையான சுவாதி-ராம்குமார் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தினை ஷேர் செய்த ரசிகர் இந்த சம்பவம் படமாக்கப்படவேண்டும் என நினைத்தேன் அப்பிடியே நடந்து விட்டது நன்றி ஞானவேல் சார் என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.



Advertisement

Advertisement