• Apr 17 2026

கல்யாணம் செய்ததும் அதிரடியாக ரூட்டை மாற்றிய டாப்சி.! அவரின் இறுதி முடிவு என்ன தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழில் 'ஆடுகளம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. இதனைத் தொடர்ந்து இவர் 'ஆரம்பம், வை ராஜா வை' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 

அதிலும் குறிப்பாக குறிப்பாக இந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்ட படங்களில் தான் அதிகளவில் நடித்து வருகிறார். 

டாப்சியும், டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரர்  மத்தியாஸ் போயும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், அண்மையில் தான் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.


இந்த நிலையில், தற்போது தனது நடிப்பை விட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் டாப்சி.


அதன்படி அவர் கூறுகையில், என் வாழ்க்கையில் அதிக நாட்களை சினிமாவுக்காக செலவழித்து விட்டேன்.ஒரு நாளில் 12 மணி நேரம் சினிமாவுக்காக உழைத்த நாட்களும் உண்டு. தற்போது நடிப்பைவிட சொந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 

எனவே இந்த கதையை விடவே கூடாது என்று நினைக்கும் அளவுக்கு நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிக்க போகிறேன்.  வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது. அந்த வாழ்க்கையை  அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். குடும்ப உறுப்பினர்கள், சிநேகிதர்கள், உறவினர்களிடையே அதிக நேரத்தை செலவிட விரும்புகின்றேன் என்றார்.


 

Advertisement

Advertisement