• Dec 26 2024

துபாய் குறுக்கு சந்தில் கூட வீடு வாங்கி போடும் அஜித்.. கோடிகளில் குவியும் சொத்துக்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் அஜித் ஏற்கனவே துபாயில் ஒரு மாளிகை போன்ற வீட்டை வாங்கி உள்ள நிலையில் தற்போது இன்னொரு வீட்டை வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களுக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்படுவதால் அவர்கள் தங்களுக்கு வரும் வருமானத்தை பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வருகின்றனர் என்பதும் விஜய், ஐடி நிறுவனங்கள் திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றை வாங்கி போடும் நிலையில் அஜித் விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளை வாங்கி குவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சென்னை மற்றும் கேரளாவில் அஜித்துக்கு சொந்தமாக சில வீடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் அடிக்கடி துபாய் சென்று வருவதால் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் துபாயில் மாளிகை போன்ற ஒரு வீட்டை வாங்கினார் என்றும் அது கோடிக்கணக்கான விலை மதிப்புடையது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ஒரு வீடு வாங்கி இருப்பதாகவும் அந்த வீடும் பல கோடி பெருமானது என்றும் கூறப்படுகிறது. அஜித் குடும்பத்துடன் அடிக்கடி துபாய் சென்று வருவதால் அங்கு தங்குவதற்கு ஒரு வீடு என்பதால் முதலில் ஒரு வீடு வாங்கியதாகவும் இதனையடுத்து தன்னுடைய நண்பர்கள் பைக் டூர் துபாய் வழியாக செல்லும் போது தங்கி கொள்வதற்காகவும் பைக்கை நிறுத்திக் கொள்வதற்காகவும் தற்போது ஒரு வீட்டை அவர் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இன்னும் சில சொத்துக்களை துபாயில் வாங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தியை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் துபாய் குறுக்குச் சந்து கூட விடாமல் அஜித் சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

அஜித் நடித்து வரும்விடாமுயற்சிபடத்திற்கு அவருக்கு ரூ.120 கோடி சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படும் நிலையில் அடுத்த படமானகுட் பேட் அக்லிபடத்திற்கு 140 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நூறு கோடி கைக்கு மேல் அசால்ட்டாக ஒரு திரைப்படத்திற்கு சம்பளம் வாங்குவதால் தான் அஜித் சொத்துக்களை வாங்கி குவித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement