• Apr 17 2026

அட்ரா சக்க..!! 100 கோடியை நெருங்கும் யூத்.. கொண்டாட்டத்தில் கென் கருணாஸ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தொடர்ந்து முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவர் கென் கருணாஸ் . அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை போன்ற படங்கள் மூலம் கவனம் பெற்ற அவர், பின்னர் அசுரன், விடுதலை 2, வாத்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இந்த நிலையில், அவர் இயக்கி நடித்த யூத் திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். 

மேலும், பார்வதா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.


பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, அவர்களின் சவால்கள் மற்றும் கனவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த நிலையில், யூத் படம் உலகளவில் ரூ.82 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விரைவில் ரூ.100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement