விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபல ஜோடிகளில் ஒருவர். நானும் ரவுடிதான் படத்தில் இணைந்து பணியாற்றியபோது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர்கள், 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் வாடகைத் தாய் முறையின் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்களாக ஆனார்கள்.
திருமணத்திற்குப் பிறகும் இருவரும் தங்களது தொழிலில் பிஸியாக உள்ளனர். நயன்தாரா தற்போது ‘டாக்சிக்’, ‘மண்ணாங்கட்டி’, ‘ராக்காயி’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படம் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், விக்னேஷ் சிவன் அளித்த ஒரு பேட்டி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதில், “நான் 300 முதல் 350 கோடி ரூபாய் வரை சேமித்து, அதை ஃபிக்ஸ்ட் டெபாசிட்டில் முதலீடு செய்து, வருடத்திற்கு 21 கோடி வருமானம் பெற வேண்டும். அப்போது தான் முழுமையாக செட்டில் ஆனதாக நினைப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள், “ஒரு நாளைக்கு 30 லட்சம் செலவா?” என ஆச்சரியத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!