• Apr 17 2026

துல்கரின் 'I Am Game' படத்தில் இத்தனை ஆச்சரியங்களா? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வரும் துல்கர் சல்மான் தொடர்ந்து வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சமீபத்தில் வெளியான அவரது ‘காந்தா’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது அவர் நடித்துவரும் ‘I Am Game’ திரைப்படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த படம் துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கி வருகிறார். சூதாட்டத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இந்த படம், திரில்லர் அம்சங்களுடன் உருவாகி வருகிறது.


மேலும், தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதோடு, அன்பறிவு சண்டை இயக்குநராக பணியாற்றுகின்றார். நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், மற்றும் கதாநாயகியாக கயாடு லோஹர் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், ‘I Am Game’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. சுமார் 156 நாட்கள், 11 மாதங்கள், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டுள்ளது என்பது படத்தின் பிரம்மாண்டத்தைக் காட்டுகிறது. வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement