• Apr 17 2026

இந்த ஆட்டம் வேற லெவல்! – வெளியானது நாகபந்தம் படத்தின் 'சுர சுர' பாடல் புரோமோ..

shali / 1 hour ago

Advertisement

Listen News!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக ‘நாகபந்தம்’ உருவாகி வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த மர்மத் திரில்லர் படத்தில் விராட் கர்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் நபா நடேஷ் பார்வதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.


இந்த படத்தை அபிஷேக் நாமா இயக்குகிறார். மேலும் ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், ‘நாகபந்தம்’ படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘சுர சுர’ பாடலின் புரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பாடல் முழுமையாக வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

மர்மம், அதிரடி மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகும் இந்த படம், காட்சியமைப்பிலும் இசையிலும் பெரிய அளவில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ‘நாகபந்தம்’ திரைப்படம் வருகிற ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால், இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement