அமலா பால் தனது படத் தேர்வுகளில் கவனம் செலுத்தி, கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிப்பதன் மூலம் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த அவர், முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தினார்.

தனது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது இயக்குநர் A. L.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர்கள் விவாகரத்து செய்துகொண்டனர்.
அதற்குப் பிறகு, ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இலை என்ற மகனும் உள்ளார். தற்போது குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் மற்றும் ஜகத் தேசாய், தங்களின் தனிப்பட்ட தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது வழக்கம். சமீபத்தில், இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவிற்கு போஸ் கொடுக்கும் போது ஜகத் தேசாய், அமலா பாலை அணைத்துக்கொண்டு ரொமான்டிக்காக கொஞ்சி பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், தம்பதியரின் கியூட் மற்றும் நெருக்கமான தருணத்தை பாராட்டி வருகின்றனர்.
Looks like she’s counting seconds, not enjoying the moment… 🙃 pic.twitter.com/wHiTbsMvp5
— Cine➰Loop (@Cineeloop) April 29, 2026
Listen News!