• Jun 15 2026

அமைதியான விஜய்க்குள்ளும் இவ்வளவு பிரச்சனையா? - மகன் குறித்து ஷோபா சந்திரசேகர் உருக்கம்

shali / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் மற்றும் சங்கீதா இடையிலான உறவில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விவாகரத்துக்கு செல்லவுள்ளதாகவும் வெளியாகிய தகவல்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சங்கீதா தாக்கல் செய்ததாக கூறப்படும் மனுவில், விஜய் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக பரவிய செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு விமர்சனங்களும், ஊகங்களும் எழுந்துள்ளன.


இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. அதில் நீதிமன்றம் அடுத்த விசாரணையை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த பிரச்சனை அரசியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கருத்துகளும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், விஜயின் தாய் ஷோபா அளித்திருந்த பழைய பேட்டி மீண்டும் வைரலாகியுள்ளது. அந்த பேட்டியில், விஜய் மிகவும் அமைதியானவர் என்றும், எளிமையான உணவுகளை விரும்புபவர் என்றும் அவர் கூறியிருந்தார். குறிப்பாக, தோசை மீது அவருக்கு அதிக விருப்பம் இருப்பதாகவும், எப்போது கொடுத்தாலும் அமைதியாக சாப்பிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டி தற்போது மீண்டும் பரவி வரும் நிலையில், விஜயின் தனிப்பட்ட குணநலன்கள் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.


Advertisement

Advertisement