• May 28 2026

மயில் வீட்டில் வெடிக்கும் பூகம்பம்.. அரசியின் செயலால் குதூகலிக்கும் காந்திமதி.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோவிலுக்கு போன மயில் அப்பா குழப்பத்தோட வீட்டுக்கு வந்து நிக்கிறார். அதைப் பார்த்த மயில் எதுக்கு உங்க முகம் ஒருமாதிரி வாட்டமாக இருக்கு என்று கேட்கிறார். பின் பாக்கியம் இவர் எங்கயாவது ஊர் சுத்த போயிருப்பார் என்று சொல்ல, அதுக்கு மயிலோட அப்பா நான் ஒன்னும் ஊர் சுத்தப்போகேல மயில் விசயமா வக்கீலிட்ட கதைக்கத் தான் போனேன் என்கிறார். 

அதனை அடுத்து மயில் அப்பா சரவணனை கோவிலில வைச்சு ஒரு பொம்பிளை கூட பார்த்தேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியம் ஷாக் ஆகுறார். மேலும், மயில் வீட்டை விட்டு வந்து கொஞ்ச நாள் கூட ஆகேல அதுக்குள்ள அவருக்கு அடுத்த பொண்ணு கேட்குதா என கோபமாக கேட்கிறார். பின் மயில் எனக்கு ஏற்கனவே தெரியும் என்கிறார்.


இதைக் கேட்ட பாக்கியம் இப்ப சரவணனோட குணம் என்ன என்று தெரிஞ்சிட்டுத் தானே இனிமேல் நாங்க பார்த்துக்கிறோம் என்று சொல்லுறார். அதுக்கு மயில் எனக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்ல என்று சொல்லிட்டார் இனி அவர் யார் கூட வேணும் என்றாலும் பழகட்டும் என்கிறார். மறுபக்கம் காந்திமதி கோமதியை பார்த்து நீங்க போடுற சண்டை சின்னப்பிள்ளை சண்டை மாதிரி இருக்கு என்கிறார்.

பின் அரசி குமார் வாங்கிக் கொடுத்த மாத்திரையை காந்திமதிக்கு கொடுக்கிறார். அது குமார் வாங்கிக் கொடுத்தது என்று அறிந்த காந்திமதி என் பேரனுக்கு என்மேல எவ்வளவு அக்கறை என்று சொல்லி சந்தோசபப்டுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement