• Dec 26 2024

கங்குவா படத்தில் பணியாற்றிய இன்னொரு பிரபலமும் திடீர் மரணம்! பேரதிர்ச்சியில் படக்குழுவினர்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார். எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது.

சூர்யா நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆனது. அந்த படம் தோல்வியை சந்தித்தது. அதன் பின்பு பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்க சூர்யா கமிட் ஆனார். ஆனாலும் அந்த படத்தில் இருந்து விலகினார்.

இதை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமானார் சூர்யா. இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வரலாற்றுக் கதை அம்சம் கொண்ட கதை களத்துடன் உருவாக்குவதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

d_i_a

மேலும் கங்குவா படத்தில் இருந்து வெளியான க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்,ட்ரெய்லர் என அனைத்துமே  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதை தொடர்ந்து படத்திற்கான பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.


இந்த நிலையில், கங்குவா  படத்தில் எடிட்டர் நிஷாத் யூசூஃப் மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார்.  அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 43 வயது என கூறப்படுகிறது. கங்குவா ரிலீஸ் நெருங்கும் போது இவ்வாறு எடிட்டர் மரணம் அடைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கங்குவா படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் உயிரிழந்த சூழலில் தற்போது இந்த படத்தின் எடிட்டரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement