• Apr 19 2026

சல்மான்கான் - ஏ.ஆர்.முருகதாஸ் படம்.. விஜய் ரிஜக்ட் செய்த கதையா? ஆச்சரிய தகவல்..!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் 23 வது படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சல்மான் கான் படத்தை இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. சல்மான் கானுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை ஏற்கனவே விஜய் ரிஜெக்ட் செய்த கதை என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஒரு திரைப்படம் உருவாக இருந்தது என்பதும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு கூட வெளியானது என்பது தெரிந்தது. அதன் பின்னர் திடீரென இந்த படம் டிராப் செய்யப்பட்டதை அடுத்து விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



விஜய் -ஏ.ஆர்.முருகதாஸ்  படத்தின் டிராபிற்கு காரணம் ஏ.ஆர்.முருகதாஸ்  கூறிய கதையை விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும் குறிப்பாக இரண்டாம் தனக்கு சரியாக வராது என விஜய் கூறியதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் விஜய் ரிஜெக்ட் செய்த கதையை தான் சல்மான் கானுக்கு, ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் கூறியதாகவும் இந்த கதை சூப்பராக இருப்பதாக கூறிய சல்மான்கான் உடனே அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement