• Dec 27 2024

அர்ஜுன் தாஸுக்கு சங்கர் பிடிக்காதா? 'ஒன்ஸ்மோர்' படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ்..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக காணப்படுபவர் தான் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் கைதி படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடித்திருப்பார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. கூடிய விரைவில் இதன் இரண்டாவது பாகமும் உருவாக உள்ளது.

இதை தொடர்ந்து தனக்கேற்ற சிறந்த  திரைக்கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக வலம் வருகின்றார் அர்ஜுன் தாஸ். அதன்படி அநீதி, ரசவாதி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து கலக்கி இருப்பார். வித்தியாசமான கதைக்களத்தில் அமைந்த இந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிகை அதிதி சங்கர் இணைந்து நடித்த புதிய படத்தின் டைட்டில் டீசர் இன்றைய தினம் வெளியாகி உள்ளது. அதன்படி 'ஒன்ஸ்மோர்' படத்தின் டைட்டிலை சற்றுமுன் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு உள்ளார்.


அறிமுக இயக்குனரான விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை, குட் நைட் மற்றும் லவ்வர் திரைப்படத்தை தயாரித்து பில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

மேலும் இந்த படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளரான ஹெஷேம் அப்துல் வஹாப் இசையமைக்க உள்ளார். மேலும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement