• Sep 12 2025

குக் வித் கோமாளி சீசன் 6 இருந்து விலகிய மாதம்பட்டி ரங்கராஜ்!புதிய நடுவர் யார் தெரியுமா?

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் நகைச்சுவை மற்றும் சமையல் கலந்த போட்டி நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ தனது ஆறாவது சீசனின் இறுதிக்கட்டத்தை நெருங்கி வந்துள்ளது. பல்வேறு சுவாரஸ்யமான சவால்கள், ஹாச்யம், உணர்வுப்பூர்வமான தருணங்கள் ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இந்த நிகழ்ச்சியின் சமீபத்திய புரொமோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.


இந்த சீசனில் ராஜு, ப்ரியா ராமன், ஷபானா, நந்தகுமார், மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் டாப் 5 போட்டியாளர்கள் ஆக தேர்வாகியுள்ளனர். இறுதிப்போட்டி அருகில் உள்ள நிலையில், முன்னாள் சீசன்களில் கலந்துகொண்ட உமா ரியாஸ் கான், கனி, விஜே விஷால், மதுரை முத்து மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக நிகழ்ச்சியில் மீண்டும் தோன்றினர். அவர்கள் தற்போது உள்ள போட்டியாளர்களுடன் இணைந்து சமைக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதே நேரத்தில், வழக்கமாக நடுவராக பங்கேற்று வந்த மாதம்பட்டி ரங்கராஜ் இந்த வார எபிசோட்களில் காணப்படாமல் இருப்பது சற்று சந்தேகங்களை எழுப்பியுள்ளது.  இந்த நிலையில் புதிய புரொமோவில் அர்ஜுன் தாஸ் வந்தது  ரசிகர்களுக்கு பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது குக் வித் கோமாளி புதிய நடுவராக வரவிருக்கிறார் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement