• Sep 11 2025

Wow Super.. ஆக்சன் ஹீரோவா மாறிட்டீங்க..!வாழ்த்து சொன்ன சூப்பர் ஸ்டார்...!

Roshika / 7 hours ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் - ஏ. ஆர் முருகதாஸ் கூட்டணியில்  வெளியான திரைப்படம் தான் மதராஸி.  இந்த படத்தின் மூலம் ஏ. ஆர் முருகதாஸ் நீண்ட வருடங்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருந்தார். மேலும் மதராஸி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என மொட்டை  அடித்ததாகவும் கூறப்பட்டது.


அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு   சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு  காணப்படுகின்றன. மதராஸி படத்தின் படப் பிடிப்புகள் சில இலங்கையிலும் படமாக்கப்பட்டன. 


இந்த படத்தின் முதல் பாதி  காதல் நிறைந்த   காட்சிகளாலும்  ஆக்சன் காட்சிகளாலும் விறுவிறுப்பாக சென்றுள்ளன. இதன் இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க ஆக்சன் காட்சிகளை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும்  கலக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். 

மதராஸி படத்தின் திரைக்கதைக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும் இந்த படத்தில் நடித்தவர்களுக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.  இதுவரையில் இந்த திரைப்படம் 80 கோடிகளை வசூலித்ததாகவும் கூறப்படுகின்றது. 


 இந்த நிலையில், மதராஸி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு  வாழ்த்தியதாக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். 

அதன்படி அவர் அதில் கூறுகையில்,  என்ன நடிப்பு... எனக்கு ரொம்ப பிடிச்சி இருந்தது.. நீங்க ஆக்சன் ஹீரோ ஆகிட்டீங்க..  காட் பிளஸ் யூ..  என சூப்பர் ஸ்டார் வாழ்த்தியதாக சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement