தமிழ் சினிமாவில் யதார்த்தமான கதைகளை இயக்கும் சிறந்த இயக்குநராக பாலாஜி சக்திவேல் காணப்படுகின்றார். இவர் தனது திரைப் பயணத்தை இயக்குநர் சங்கரிடம் உதவி இயக்குநராக ஆரம்பித்தார்.
2002 ஆம் ஆண்டில் வெளியான சாமுராய் படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அதன் பின்பு இவர் இயக்கிய திரைப்படங்களில் காதல், வழக்கு எண் 18/9 ஆகியவை மிக முக்கியமான படங்களாக காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக வழக்கு எண் 18/ 9 திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் வென்றது.
இந்த நிலையில், தெருநாய் விவகாரம் தொடர்பாக தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார் இயக்குநர் பாலாஜி சக்திவேல். அதன்படி அவர் கூறுகையில்,
நாயை விட மனுஷன் தான் முக்கியம். 11 மணிக்கு மேல வெளிய வந்தா நாய் கடிக்கத்தான் செய்யும்.. இதை சொல்ல அருவருப்பா இருக்கு.. அந்த அளவுக்கு நாய் மீது பிரியம் வேண்டாம். மனுஷனை நம்பாமல் நாய் மீது பிரியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
Listen News!