தமிழ் சினிமா மற்றும் சீரியல் துறையில் புகழ் பெற்ற சரவணன் மீதான ஒரு முக்கிய புகார் தற்போது சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அவரது முதல் மனைவி சூர்யா ஸ்ரீ, சென்னையின் ஆவடி காவல் நிலையத்தில் தாக்குதலும், தொல்லையும் ஏற்படுகின்றது என்று புகார் அளித்துள்ளார்.
சூர்யா ஸ்ரீ அளித்த புகாரின் அடிப்படையில், சரவணனும், அவர் தற்போது திருமணம் செய்து கொண்டிருக்கும் இரண்டாவது மனைவியும் தன்னைக் கொடுமைப்படுத்தி வருகிறார்கள் என கூறப்படுகின்றது.
மேலும் சூர்யா ஸ்ரீ, “சரவணன் என்னை துரத்தி துரத்தி காதலிச்சு கல்யாணம் பண்ணார். அவருக்கு வாழ்க்கையில் ஒன்றுமே இல்லாத காலத்தில் நான் அவருக்கு துணையாக இருந்தேன். அவருடைய வளர்ச்சிக்கு பின்னால் நானும் இருக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.
Listen News!