தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராகவும் நடிகராகவும் திகழும் பாரதிராஜா பற்றிய தகவல்கள் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கடந்த சில வருடங்களாகவே பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக அடிக்கடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் நுரையீரல் தொற்று இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று, முழு நேரமும் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். பலரும் அவரை நேரில் சென்று பார்த்து நலமும் விசாரித்தனர்.

சமீபத்தில் மருத்துவமனையில் இருந்த பாரதிராஜாவின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தில் அவர் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். அவரைப் பார்த்தவர்கள் “இவர் பாரதிராஜாவா?” என கேட்கும் அளவுக்கு அவரது தோற்றம் மாறியிருந்தது.
பாரதிராஜாவுக்கு அவரது மகன் இறந்தது மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இதனால் அவர் மனதாலும் உடலாலும் சோர்வடைந்தார். அதிலிருந்து மீளும் நோக்கில் சிங்கப்பூருக்கும் சென்றிருந்தார், ஆனால் முழுமையாக குணமடைய முடியவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாரதிராஜா தற்போது உடல்நலம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதனை அறிந்த ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
Listen News!