• Apr 18 2026

தலைவர் நிக்சனின் பதவிக்கு பிக்பாஸ் வைத்த புதிய ஆப்பு- மாஸ்டர் பிளான் போடும் பூர்ணிமா மற்றும் மாயா- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதாவது இந்த வாரத்தலைவராக நிக்சன் இருக்கின்றார். எனவே லிவிங் ஏரியாவில் ஒரு மணி வைக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் தங்களுக்கு ஏதாவது அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என யாராவது நினைத்தால் அந்த மணியை அடிக்கலாம்.

மேலும் புகார் ஏற்றுக் கொள்ளப்பட்டால் நிக்சனின் பதவி பறிபோகும் என்பதோடு நேரடியாக நாமினேட் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகின்றது.இதனால் மாயாவும் பூர்ணிமாவும் எப்படி நிக்சனைக் காலி பண்ணலாம் என்று யோசிக்கின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement