• Dec 25 2024

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த பிக் பாஸ்..? சிக்கலில் விஜய் சேதுபதி

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல சர்ச்சைகள் உருவாகி வருகின்றது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகின்றார் என்று தகவல் வெளியானதில் இருந்து ஆரம்பத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன.

இதைத்தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு முதலாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோதே பலரும் அவருக்கு பாராட்டை வழங்கியதோடு உலக நாயகன் கமலஹாசனை விட இவர் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா போட்டியாளர்களை கையாளுகின்றார், நேரத்தையும் சுருக்கி உள்ளார் என்று பல பாராட்டுக்கள் கிடைத்தது.

இதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை இரண்டாக பிரித்து மொக்கையான டாஸ்க்களை வழங்கி வருகின்றார்கள் என்று தமிழ் ரசிகர்களை தொடர்ச்சியாக இழந்து வந்தது பிக் பாஸ். மேலும் வாராவாரம் கேள்வி கேட்கின்றேன் என்ற பெயரில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை மிரட்டி அவர்களை அசிங்கப்படுத்துவதும் பிரச்சனையாக மாறியது.

d_i_a

இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது பல ரசிகர்களை இழந்து டிஆர்பியிலும் தடுமாறி வருகின்றது. இதனால் மீண்டும் கமலஹாசனை நினைவு கூறும் வகையில் அவருடைய மீம்ஸ்களை இணையத்தில் பரப்ப விட்டு வருகின்றார்கள்.


இந்த நிலையில், மீண்டும் ஒரு சர்ச்சையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சிக்கி உள்ளது. அதாவது கடந்த சில நாட்களாகவே ஃபெங்கல் புயல் அட்டகாசம் செய்து வந்தது. இது நேற்றைய தினம் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் மக்கள் யாரும்  வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு அறிக்கை மூலம் கோரிக்கை விட்டது.

இவ்வாறான நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதி எபிசோட் நேற்று காலையிலிருந்து நடத்தப்பட்ட இந்த ஷூட்டிங்கில் மக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளார்கள். இதனால் தமிழக அரசு கோரிக்கையை வெளியிட்ட இக்கட்டான நிலையிலும் இப்படி ஒரு படப்பிடிப்பில் அவர்களை கலந்து கொள்ள வைத்ததன் அவசியம் என்ன? அரசின் கோரிக்கையை பிக் பாஸ் மற்றும் விஜய் சேதுபதி நிராகரிக்கின்றனரா? என தற்போது பல கேள்விகள் எழுந்து வருகின்றன.

Advertisement

Advertisement