பிரபல இயக்குநர் கே. பாக்யராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி புதிய பாதை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தான் பார்த்திபன். இவர் இயக்குநராக மட்டுமில்லாமல் ஹீரோவாகவும் அந்த படத்தில் நடித்து பெயர் எடுத்தார். தனது முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து தொடர்ச்சியாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
ஒத்த செருப்பு, இரவின் நிழல், டீன்ஸ் போன்ற வித்தியாசமான கதைகளையும் இயக்கிய பார்த்திபன், காமெடி படங்களிலும் நடித்துள்ளார். இவருடைய வில்லத்தனம் கூட ரசிகர்களால் ரசிக்கப்படும் வகையில் அமையும்.
தற்போது பார்த்திபன் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தில் அறிவு என்ற கேரக்டரில் நடித்து வருகின்றார். இந்த படம் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது பார்த்திபன் வெளியிட்ட படத்தின் போஸ்டர், படத்தின் டைட்டில் என்பன ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
அதன்படி, 'நான் தான் சிஎம்' என்ற அரசியல் தலைப்போடு குறித்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை அவரே எழுதி இயக்குவதுடன் சிங்காரவேலன் என்ற முதலமைச்சர் வேட்பாளர் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார் என்ற தகவலும் கசிந்து உள்ளது.
மேலும் பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
அதில் பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்காளப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு
Boat சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
C. M . சிங்காரவேலன் எனும் நான்....
'சோத்துக் கட்சி' என பதிவிட்டுள்ளார்.
Listen News!