• Dec 25 2024

"இறுதிச்சுற்று -2 இற்கு தயாராகும் பிக் பாஸ் ஷிவானி " ! - ரசிகர்களின் கமெண்ட்..

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

தமிழில் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன் பிரபல தொலைக்காட்சி நாடகங்களில் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்தார்.காரணங்கள் இன்றி சீரியலில் இருந்து விலகிய ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் போஸ்ட்களால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.


சமூக ஊடகங்களில் பிரபலமான இவர், தமிழின் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றார்.பிக் பாஸ் மூலம் உலக அளவில் தனக்கான ஓர் ரசிகர் படையை உருவாக்கிக்கொண்ட ஷிவானிக்கு வெளியே வர அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்து சேர்ந்தன.


இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பாக்ஸிங் ப்ராக்டிஸ் செய்யும் போட்டோ மற்றும் மழையில் கார் டிரைவ் விடீயோக்களை பதிவிட்டிருக்கும் ஷிவானிக்கு அவரது ரசிகர்கள் "இறுதிச்சுற்று -2  இற்கு தயாராகும் ஷிவானி" என கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement