• Dec 26 2024

பிக்பாஸ் புகழான பவா செல்லதுரைக்கு இதய அறுவை சிகிச்சை! மருத்துவமனையில் அவசர அனுமதி!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்குபற்றிய போட்டியாளர்களுள் ஒருவர் தான் பவா செல்லதுரையும் ஒருவர். எழுத்தாளரான இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டது தவறு என்று முன்னதாக விமர்சனங்கள் எழுந்தன.  

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் தொடர்ந்து தாக்கு பிடிப்பாரா என்ற விமர்சனங்கள் எழுந்தவாறே, அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து சீக்கிரமாகவே வெளியேறினார்.


சமீபத்தில் இவரது நடிப்பில் வெந்து தணிந்தது காடு, ஜிகர்தண்டா 2 படங்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன. மேலும், ராஜூ முருகனின் ஜோக்கர் மற்றும் மிஷ்கினின் சைக்கோ போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், எழுத்தாளர் பவா செல்லதுரை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பவா செல்லதுரைக்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதேவேளை, பவா செல்லதுரை விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்று இலக்கிய வாசகர்கள், ரசிகர்கள் பலரும் வேண்டி வருகிறார்கள்.


Advertisement

Advertisement