• Apr 17 2026

நள்ளிரவில் எல்லைமீறிய காதல் லீலைகள்.. அதிரடியாக பிக் பாஸ் கொடுத்த தண்டனை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9  ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மாதங்களை கடந்துள்ளது. தற்போது தான் இந்த நிகழ்ச்சியின்  ஆட்டம் சூடு பிடித்துள்ளது. இந்த வாரம் கேப்டன் ஆக  அமித் காணப்படுகின்றார். 

ஏற்கனவே போட்டியில் இருந்து வெளியேறிய ஆதிரை, மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்துள்ளார். இவர் வந்ததும் விளையாட்டில் பல திருப்புமுனைகள் ஏற்பட்டுள்ளது. 

அதன்படி ஆதிரை, அரோரா, பார்வதி மற்றும் கமருதீன் இடையே தொடர்ச்சியாகவே பல வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இதன்போது அரோரா காலில்  கமருதீன் விழுந்தார். 

அதற்குப் பிறகும்  துஷாரரை இழுத்து  கமருதீன் பேச, அரோரா அழுது பேசியிருந்தார். அந்த வீடியோ வைரலானது.  இப்படி இவர்களுக்கு இடையே  வாக்குவாதம் நீண்டு வருகின்றது. 


அதே நேரத்தில், பார்வதி கமருதீன் இடையேயான காதலும் நாளுக்கு நாள்  வேற கோணத்தில் திசை திரும்பி உள்ளது.  இதனால் பிக் பாஸ் அடிக்கடி மைக்கை மறைத்து பேச வேண்டாம் என்று எச்சரித்தார். ஆனாலும் அவர்கள் மீண்டும் மீண்டும்  மைக்கை மறைத்து வைத்து ரகசியமாக பேசுவதும், காதுக்குள் பேசுவதுமாக காணப்பட்டனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் ப்ரோமோ ஒன்றில்  கமருதீனும் பார்வதியும் இரவு நேரத்தில் மைக்கை மறைத்து பேசியதோடு,  அவர்கள் இருவரும் தனிமையில் ரகசியமாக பேசியதை சுட்டிக்காட்டிய பிக் பாஸ், நீங்கள் இருவரும் செய்த தப்புக்கு ஆன தண்டனை ஹவுஸ்மேட்ஸ் தான் அனுபவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

அதன்படி அமித்திடம், பிக் பாஸில் வீட்டில் உள்ள  முட்டை மற்றும் பால் பக்கெட்டுகளை  எடுத்துக் கொண்டு போய் வெளியே  வைக்க சொல்லி விடுகின்றார்.  இது  போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

இறுதியில்  இதற்காக விக்ரம் பார்வதிக்கும் கமருதீனுக்கும் கைதட்டுமாறு  சொல்லுகின்றார்.  இதனால் கோபத்தில் சக போட்டியாளர்களும் கைதட்டி தமது வெறுப்பை கொட்டி தீர்த்துள்ளனர். 

Advertisement

Advertisement