• May 24 2026

பைனான்சியரை தூண்டிவிட்ட சிந்தாமணி.. உடைந்து போன அண்ணாமலை குடும்பம்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜை பார்த்து ரோகிணி பேசுகிறார். மேலும் ஒன்றாக வெளியே போவோம் என்று கூறி ஸ்ருதியின் ரெஸ்டாரண்டுக்கு செல்கின்றனர்.

அங்கு ஏற்கனவே முத்து, மீனா மற்றும் ரவி, ஸ்ருதியுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். சிந்தாமணியை மீனா அடக்கியது பற்றி முத்து, ரவியுடன் பேசி, அதற்காக பார்ட்டி வைப்பதற்காக ரெஸ்டாரண்டுக்கு வந்ததாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நேரத்தில் அங்கு மனோஜ், ரோகிணி வருகின்றனர். மேலும் மனோஜ், ரோகிணியை “என்னுடைய பொண்டாட்டி” என்று கூறுகிறார். தனக்காகத்தான் அவர் கஷ்டப்பட்டு ஐந்து லட்சம் கட்டி தன்னை வெளியே எடுத்ததாக பேசிக் கொண்டிருக்கிறார்.


இதைத்தொடர்ந்து சிந்தாமணி வீட்டுக்கு போன ரோகிணி, தன்னை அவர்கள் கேலி கிண்டல் செய்ததாக குற்றம் சாட்டுகிறார். அவர்களை சும்மா விடக்கூடாது என்று சொல்ல, சிந்தாமணியும் தன்னையும் மீனா மிரட்டி வீட்டு பத்திரங்களை வாங்கிவிட்டு போய்விட்டார், அவர்களுக்கு செம பாடம் புகட்டுகிறேன் என்று கூறுகிறார்.

அதன்படி பைனான்சியரிடம் சென்று விஜயாவின் வீட்டை ஒரு நாளைக்குள் ஜப்தி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்ப சொல்லிக் கூறுகிறார். அதன்படியே அவரும் நோட்டீஸ் அனுப்புகிறார். இந்த நோட்டீஸை ரவி பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் வீட்டில் உள்ளவர்களிடம் இந்த விஷயத்தை சொல்ல, அண்ணாமலை உடைந்து போகிறார். அந்த நேரத்தில் மனோஜ், “இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை, இந்த வீட்டை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு அந்த காசை பைனான்சியருக்கு கட்டுவோம்” என்று சொல்ல, அங்கிருந்த முத்து மனோஜை கண்டபடி திட்டுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement