• Dec 27 2024

பிளஸ்-2 தேர்வில் வென்ற திருநங்கை நிவேதாவிற்கு குவியும் பாராட்டுக்கள்.!

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ்நாட்டில் கடந்த ஆறாம் திகதி பிளஸ் 2 தேர்வின் பெறுபேறுகள் வெளியான நிலையில் முன்னிலை மற்றும் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி 283 மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இவர் 2015-ம் ஆண்டில் திருநங்கைகளுடன் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிளஸ் 2 தேர்வு எழுதிய ஒரே ஒரு திருநங்கையான நிவேதா வெற்றி பெற்றதோடு தொடர்ந்து அவர்  நீட் தேர்வையும்  எழுதி இருக்கும் நிலையில் மருத்துவராவதுதான் தனது கனவு என்று இன்டெர்வியூக்களில் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவி நிவேதாவை நேரில் அழைத்து திருக்குறள் புத்தகம், பேனா ஆகியவற்றை வழங்கி பாராட்டியதுடன், அவருடைய உயர்கல்விக்கு உதவுவதாக உறுதியளித்தார். 


அத்தோடு மாணவி நிவேதாவிற்கு தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்ததோடு அண்மையில் நேரில் சந்தித்தும் பாராட்டியிருக்கிறார்.அத்துடன்  தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, சென்னையில் உள்ள சி.ஐ.டி. காலனியில் உள்ள தமது இல்லத்திற்கு மாணவி நிவேதாவை நேரில் அழைத்துப் பாராட்டினார்.மேலும் திரையுலகத்தினரிடமிருந்தும் மாணவி நிவேதாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளன.

Advertisement

Advertisement