• Dec 28 2024

உங்களை நீங்களே உருவாக்கி கொள்ளுங்கள்! மோட்டிவேஷன் பதிவு போட்ட சிறகடிக்க ஆசை மீனா !

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

ஒரு சில கலைஞர்கள் தங்களுக்கான அங்கீகாரம் திரைப்படங்களில் கிடைக்காவிட்டாலும் அவற்றை சின்னத்திரையில் பெற்றுவிடுகின்றனர். அவ்வாறே சமீபத்தில் வெற்றிநடை போடும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் பிரபலமாகியுள்ளனர்.


முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. குறித்த நாடகமே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் trp ரேட் அதிகமானதாக காணப்படுகின்றது. குறித்த நாடகத்தில் மீனவாக நடிக்கும் கோமதிப்பிரியா பதிவொன்றை போட்டுள்ளார்.


தனது இன்ஸ்டா பக்கத்தில் "இன்று நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று நீங்கள் எவ்வளவு போராட வேண்டும் என்பது யாருக்கும் தெரியாது. மற்றவர்களால் ஏமாற்றப்பட்ட பிறகு, நீங்கள் எத்தனை முறை உங்கள் மீது நம்பிக்கையை மீட்டெடுத்தீர்கள் என்பது யாருக்கும் தெரியாது . உங்கள் சொந்த தீப்பொறியை யாரோ மங்கச் செய்ய முயற்சித்த பிறகு நீங்கள் எத்தனை முறை மீண்டும் தூண்டினீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. இன்று நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று எத்தனை முறை வலியை சக்தியாக மாற்றுகிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. இதய துடிப்பு முதல் முழு மனதுடன் அன்பு செலுத்துவது வரை எத்தனை முறை நம்பிக்கையை உருவாக்கியுள்ளீர்கள் என்பது யாருக்கும் தெரியாது.உங்களை நீ ங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள் , உங்கள் சுயமுன்னுரிமையை உருவாக்குங்கள் , உங்கள் மகிழ்ச்சியை உருவாக்குங்கள்" என்ற வசனங்களுடன் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இதோ 

 

Advertisement

Advertisement